வழக்கம் போல எங்கள் வழ்கை வளர்ந்துகொண்டிருந்தது,நாமெல்லாம் எட்டு பேர் இரண்டு உறவுகள் உறங்க வந்ததால் மொத்தமாக பத்து பேர்,இராப்பொழுதுகளை தன் இளைய நண்பர்களுடன் கழித்துகொண்டிருந்த இரண்டாவது அண்ணன் அன்று இரவுமற்றும் வீட்டில் உறங்க சம்மதித்தான்.மையிருட்டில் கடலின் சங்கீதம் மெளனமானது,உப்பை நுகர்ந்துகொண்ட தென்றலின் மெல்லிய வாடைகளில் எங்கள் சுவாசம் சுரமானது,முழு மதி முத்தமிட்டுக்கொண்டிருந்த மெல்லிய இராப்பொழுதில் முற்றத்தில் ஒன்று கூடி முணுமுணுத்துக்கொண்டிருந்தோம்.பக்கத்து வீட்டில் குழந்தைகளை தூங்க வைக்க அந்த தாயவலின் மழலை கீதம் எங்கள் மனைவரை எட்டியது,விடிந்தால் ஒரு பேரழிவு எங்களை அன்மித்துவிடும் என்பதை அறியாத அப்பாவிகள் நாங்கள்.அதிகாலையில் அழுதுக்கொண்டு அன்னையை அரவனைக்கும் அழகு பிள்ளைகள் கடலலைகலாள் கழுவிச்செல்லப்பட்டு மூச்சையிழப்பார்கல் என்று தெரியாமல் தாலாட்டும் தாயவல்.அன்றிரவு மற்றும் அவள் கணவன் அவர்களோடு இல்லை அவன் ஒரு பாதுகாவலன் இரவு கடைமைக்காக நர்ந்துவிட்டன்,அதனால் நாலு பிள்ளைகளும் அந்த அன்புத்தாயும் நடுஇரவில் மௌனமிட்டர்கள்.நேரத்தின் நகர்வில் கரிய இரவு கலைந்துகொண்டிருந்தது.முற்றத்தில் சற்றுநேரம் முகாமிட்ட நாங்கள் மூச்சை விடியும் வரை நிறுத்துவதற்காக விட்டிற்குள் நுழைந்தோம் துஉக்கதிட்காக,பக்கதுவீடுகலேல்லாம் படுத்துவிட்டன.இறுதியில் என் சித்தப்பா சிறுதுண்டு பாயைவிரித்து சிலையானார் விராந்தையில்.அனைத்து ஜீவன்களும் துஉங்கிய பிறகு எனக்கு இளம் தென்றல் துஉது கொண்டுவந்தது கடலுக்கும் கடல் அலைகளுக்குமிடையில் வாக்குவாதம் வளர்ந்த்துவிட்டதாமென்று.............
தொடரும் ........
Tuesday, 25 November 2008
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
நல்ல விசயம் மூசீன்.. இப்போதான் பார்த்தேன்.. ஒவ்வொன்றாக படித்து பிறகு கருத்து சொல்கிறேன்
Post a Comment